Wednesday, October 19, 2016

Arpanithan Ennaya



        அர்ப்பணித்தேன் என்னையே இயேசுவே - உம்
        அன்புப்பலிப் பீடத்திலே தியாகமாகுவேன் (2)
        உன் பாதையிலே பயணமாகுவேன்
        உண்மைக்கான சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
        வாழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடுவேன்
              1. உள்ளங்கள் உயர்ந்துவாழ உம்மோடு பாடுபட
                 என்னை எந்நாளும் அளிக்கின்றேன் (2)
                 இதய உணர்வுகள் இன்ப ராகங்கள் - 2
                 எல்லாம் உந்தன் பணிக்கு என அர்ப்பணிக்கின்றேன்
             2. வாழ்வுக்குப் போராடும் உள்ளங்களில்
                 வளர்ந்தே வலுவூட்ட விழைகின்றேன் (2)
                 வாழ்க்கைப் பலியிலே என்னையே தந்து - 2
                 தளர்ச்சி நீக்கி வளர்ச்சி காண வழியுமாகுவேன்



Vaalvai Alikkum Vallava


      வாழ்வை அளிக்கும் வல்லவா தாழ்ந்த என்னுள்ளமே 
           வாழ்வின் ஒளியை ஏற்றவே எழுந்து வாருமே (2)
                 1. ஏனோ இந்த பாசமே ஏழை என்னிடமே - 2
               எண்ணில்லாத பாவமே புரிந்த பாவிமேல்
                 2. உலகம் யாவும் வெறுமையே உமையாம் பெறும் போது (2)
                உறவு என்று இல்லையே - உன் உறவு வந்ததால்