Sunday, June 25, 2017
Yaridam Selvom Iraiva
யாரிடம் செல்வோம் இறைவா
வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன
யாரிடம் செல்வோம் இறைவா
இறைவா (4)
அலைமோதும் உலகினிலே
ஆறுதல் நீ தர வேண்டும் (2)
அண்டி வந்தோம் அடைக்கலம் நீ (2)
ஆதரித்தே அரவணைப்பாய் (2)
மனதினிலே போராட்டம்
மனிதனையே வாட்டுதையா (2)
குணமதிலே மாறாட்டம் (2)
குவலயந்தான் இணைவதெப்போ (2)
வேரறுந்த மரங்களிலே
விளைந்திருக்கும் மலர்களைப் போல் (2)
உலகிருக்கும் நிலை கண்டு (2)
உனது மனம் இரங்காதோ (2)
Annaikku Karam Kuvipom
அன்னைக்கு கரம் குவிப்போம்
அவள் அன்பைப் பாடிடுவோம் - 2
1. கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் - அந்த
முன்னவனின் அன்னை எனத் திகழ்ந்தாள் - 2
மனுக்குலம் வாழ்ந்திடப் பாதை படைத்தாள் - 2
தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்
2. பாவமதால் மனிதன் அருள் இழந்தான் -அன்று
பாசமதால் அன்னைக் கருணை கொண்டாள் - 2
பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார் - 2
பாரினில் அவள் புகழ் பாடிடுவோம்
3. அன்னைமரி உலகில் வாழ்ந்த வழி
நாம் சென்றிடுவோம் அதுவே சிறந்த வழி - 2
நல்வழி நாடிடும் யாவருமின்று - 2
நல்வழி கண்டிடச் செய்திடுவோம்
Masilla Kanniye
மாசில்லாக் கன்னியே மாதாவே உம்மேல்
நேசமில்லாதவர் நீசரே யாவார்வாழ்க வாழ்க வாழ்க மரியே -2 (2)
1. மூதாதை தாயாசெய் முற்பாவ மற்றாய்
ஆதியில் லாதோனை மாதே நீ பெற்றாய் - வாழ்க ...
2. உம் மகன் தாமே உயிர் விடும் வேளை
என்னை உன் மைந்தனாய் ஈந்தனரன்றோ?-வாழ்க ...
மாசில்லாக் கன்னியே - Song
Nenjathile Thuimayundo
நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகின்றார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கின்றார் (2)
நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கின்றார் (2)
1. வருந்திச் சுமக்கும் பாவம் நம்மைக் கொடிய இருளில் சேர்க்கும் (2)
செய்த பாவம் இனி போதும் அவர் பாதம் வந்து சேரும் -2
அவர் பாதம் வந்து சேரும்.
செய்த பாவம் இனி போதும் அவர் பாதம் வந்து சேரும் -2
அவர் பாதம் வந்து சேரும்.
2. .குரதி சிந்தும் நெஞ்சம் நம்மைக் கூர்ந்து நோக்கும் கண்கள் - 2
அங்கு பாரும் செந்நீர் வெள்ளம் அவர் பாதம் வந்து சேரும் -2
அவர் பாதம் வந்து சேரும்.
அங்கு பாரும் செந்நீர் வெள்ளம் அவர் பாதம் வந்து சேரும் -2
அவர் பாதம் வந்து சேரும்.
நெஞ்சத்திலே தூய்மையுண்டோ - Song
Subscribe to:
Posts (Atom)